
முல்லைத்தீவு – துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்றய தினம் இரவு மதுபான விருந்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் தஜீவன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அதே இடத்தை சேர்ந்த மேலும் நால்வர்
மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.