அறுவடைக்கு எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரி விவசாயிகள் கோரிக்கை.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கமநல  சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் அறுவடை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டும் எரிபொருள் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இன்னும்  சிலநாட்களுக்குள்  எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் நெற்கதிர்கள் சேதமடைந்து போய்விடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு எமது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எமக்கு எரிபொருளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews