11 வது வடக்கு நீலங்களின் சமர் கோலாகலமாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகளிற்கிடையிலான குறித்த கடினப்பந்து போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய குறித்த போட்டியானது 11வது வடக்கு நீலங்களின் சமர் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களைக்கொண்ட குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்விலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையிலிருந்து விருந்தினர்கள், போட்டி வீரர்கள் உள்ளிட்டோர் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் விளையாட்டு மைதானம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.
இதன்போது இவ்வாண்டு புதிதாக அறிமகப்படுத்தப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை அணித்தலைவர்கள் ஏந்தி வந்தனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசியக்கொடியை ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி பத்மநாதன் ஏற்றிவைக்க பாடசாலை கொடியினை பாடசாலை முதல்வர்கள் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தேசியக்கீதம், மற்றும் பாடசாலைக் கீதங்கள் சைக்கப்பட்டன. தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்று ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.