இருபத்தி இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் 17 பேரும் தற்போது கடந்த 4 நாட்களாக திருச்சி சிறப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் மேலும் நால்வர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் அல்லது அரசாங்கம் குறித்த போராட்டக்காரர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களது போராட்டத்தை நிறுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரதத்துக்கு எமது அழுகை நியூஸ் தெரிவித்துள்ளனர்.
இருபத்தி ஒரு உண்ணாவிரதம் தங்களை உறவினர்களுடன் சேர்த்து விடுங்கள் அல்லது கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கூறிய குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 14 பேரில் மருத்துவ மருத்துவமனையில் கூட எவரும் உணவு உண்ணாமல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் நாளுக்கு நாள் அவர்களின் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உறவுகள் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு உருக்கமான கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களின் விடுதலை தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது