தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் வீழ்ந்துள்ளது நாடு! சம்பிக்க எச்சரிக்கை.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், தமிழ் மக்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்தியமையால்தான் நாடு இன்று முன்னேறாமல் படுகுழியில் வீழ்ந்துள்ளது. இதை தற்போதைய அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு நான் ஆதரவு வழங்கமாட்டேன். அதேவேளை, இந்த அரசை வீழ்த்தும் சதி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும் மாட்டேன்.

நாடாளுமன்றில் நான் தொடர்ந்தும் சுயாதீன உறுப்பினராகவே இருப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளில் அதிருப்தி இருந்தமையால் தான் நான் அதிலிருந்து விலகி சுயாதீன உறுப்பினராக செயற்படுகின்றேன்.

மக்களின் நன்மை கருதி அரசு முன்னெடுக்கும் செயற்றிட்டங்களுக்கு மாத்திரம் வெளியில் இருந்து ஆதரவு வழங்குவேன்.எனது எதிர்கால இலக்கு தொடர்பில் இப்போது நான் சொல்லமாட்டேன். தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டே நான் பயணிப்பேன்.

தமிழ் மக்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்தியமையால்தான் நாடு இன்று முன்னேறாமல் படுகுழியில் வீழ்ந்துள்ளது. இதைத் தற்போதைய அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews