மீன்பிடித்துறைமுகங்களுக்குத் தேவையானஎரிபொருளை தனியாக இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைக்கு 22 மீன்பிடித்துறைமுகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரிய வள்ளங்கள் உள்ளிட்ட வள்ளங்கள் நாளாந்தம் கடற்தொழிலுக்குச் சென்று வருகின்றன.
எனினும் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடுகாரணமாக மீன்பிடித்துறைமுகங்களின் செயற்பாடுகள் மற்றும் கடற்தொழிலாளர்களின் வருமானம் என்பன பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது.
அதனை முன்னிட்டே தற்போது மீன்பிடித்துறைமுகங்களுக்கான எரிபொருளை தனியாக இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.