ஐ.நா உலக சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா விலகல்.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு, ரஷ்யாவை தமது அமைப்பிலிருந்து இடைநிறுத்தியது.

உக்ரைன் மீதான நடவடிக்கை தங்களது மதிப்புகளுக்கு எதிரானது என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்திருந்தது.இந்த நிலையில், உலக சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா விலகுவதாக மொஸ்கோ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews