உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் இரசாயன ஆலை மீது ஷெல் தாக்குதல்.

உக்ரைனின் முன்னணி நகரமான செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலை அடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டன் கணக்கில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி ஹைடாய் தேசிய தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அசோட் ஆலையில் 300-400 உக்ரேனிய போராளிகள் சிக்கியுள்ளதாக ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதி கூறியதை அடுத்து, உக்ரேனியப் படைகள் அசோட் ஆலையில் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 200 ஊழியர்கள் மற்றும் செவரோடோனெட்ஸ்கில் வசிப்பவர்கள் 600 பேர் உட்பட, ஆலைக்கு அடியில் உள்ள பல வெடிகுண்டு முகாம்களில் சுமார் 800 பேர் பதுங்கியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் முன்னேற்றத்தின் மையமாக மாறிய செவெரோடோனெட்ஸ்கில் இடைவிடாத சண்டைகள் நடந்ததாக செர்ஹி ஹைடாய், தனது பிந்தைய நேர்காணலில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews