காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 55ஆவது பட்டமளிப்பு விழா.

மட்டக்களப்பு காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 55 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் புதிய காத்தான்குடி வளாகத்திலுள்ள பள்ளிவாயல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் உப தவைவர் உப அதிபர் மௌலவி எஸ் .எம் .அலியார் பாலாஜி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2020ஆம் ஆண்டு கற்கையை முடித்த 13 மௌலவிகளுக்கும் 2021ஆம் ஆண்டு கற்கையை முடித்த 19 பேருமாக 32 மௌலவிமாருக்கு இதன் போது பலாஹி பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் 13 மாணவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்தமைக்காக ஹாபிழ் என்ற பட்டம் வழங்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கல்லூரியின் அதிபர். விரிவுரையாளர்கள் .கல்லூரி நிர்வாகிகள். உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள். என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறிய மௌலவிமாரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

Recommended For You

About the Author: Editor Elukainews