கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பிற வலியுறுத்தி இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
உயர் கல்வியை இராணுவ மயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்றவற்றை எதிர்த்து போராடவுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், எதிர்கால மாணவர்களை கடனாளியாக்காதீர்கள், கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக கிழித்தெறி, என பல வாசகங்கள் குறிப்பிட்ட பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.