உக்ரைனுக்கு ஆயுதங்களை குவிக்க தயாரான நாடு!

மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக பின்லாந்து அறிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா இராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்களை அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்தநிலையில், பல ஆண்டுகளாக அணிச்சேரா கொள்கையில் இருந்த நார்டிக் நாடான பின்லாந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யாவை எதிர்த்து போராட தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டி கைக்கோனேன்  இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,

பின்லாந்து அரசு உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்குவது குறித்த அனுமதியை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால் எத்தகைய ஆயுதங்கள் வழங்கப்படும், எவ்வாறு வழங்கப்படும், மற்றும் எந்தநாளில் வழங்கப்படும் போன்ற தகவல்கள் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இடம்பெறவில்லை.

இருப்பினும், உக்ரைனுக்கு எத்தகைய ஆயுதங்கள் தேவைப்படுகிறதோ அதனை பின்லாந்து வழங்கும் என்று அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக பின்லாந்து எடுத்துள்ள இந்த அதிரடி முடிவானது, மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைய விரும்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருப்பதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews