வடமராட்சியில் எரிபொருளுக்காக  இன்றும்  நீண்ட வரிசை, பல்வேறு நடைமுறை மக்கள் அவதி….!

வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய  எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும்  மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை என்றும் அவதானிக்க முடிந்தது.
கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் இல்லாத நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகம் இடம் பெற்ற நிலையிலேயே இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் நீண்ட மணி நேரம் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்ததுடன்  நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலகம் ஊடாக பதிவு செய்யப்பட்ட பெற்றோல் வாகனங்களுக்குரிய அட்டைக்கு  ரூபாய் 2500க்கு பெற்றோல் வழங்கப்பட்டதுடன்  அவ்வாறு பிரதேசத்திற்கு வெளியே இருந்து செல்கின்ற அல்லது பிரதேச செயலகத்தில்  பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூபாய் 500க்கு மட்டுமே பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றது. இங்கும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோல் நிரப்பி சென்றதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு  ரூபா 1500 க்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு  ரூபா ஆயிரத்துக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.இங்கும் பெற்றோல் நிரப்ப மிக நீண்ட வரிசை காணப்பட்டது.
இதேவேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட நேரமாக மிக நீண்ட வரிசையில் டீசல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் காத்திருந்தத நிலையில் பிற்பகல் 6:00 மணிக்கு பின்னர் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
 இதேவேளை வடமராட்சியில்  நெல்லியடி,  மந்திகை, கிராம கோடு பருத்தித்துறை உட்பட்ட அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றைய தினம் பிற்பகல் 4:00 மணிக்கு  டீசல் 30000 லீட்டர் டீசல் வந்திறங்கின.

Recommended For You

About the Author: Editor Elukainews