இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென்மையான மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நாட்டுக்கு வெளிநாட்டு வருவாயையும் கொண்டு வரவும் உதவும். இலங்கையில் சுற்றுலாவுக்கு கிடைத்த பெரிய வெற்றி இது என்றும் அவர் கூறியுள்ளார்.