மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 222 வது வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை திருத்தல நிருவாகக் குரு அருட்பணி ஜே.எஸ்.மொறாயஸ் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று
கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
ஆலய திருவிழா நவநாட்காலங்களில் தினமும் மாலை திருச்செபமாலையும், தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்று
நேற்றைய தினம் புனிதரின் திருச்சுரூப பவனியும் நற்கருணை வழிபாடும் இடம்பெற்றது
பெருவிழா கூட்டுத்திருப்பலியானது நேற்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை மொராயஸ், குரு முதல்வர் ஏலக்ஸ் ரொபட் அருட் தந்தையர்களுடன் இயேசுசபை துறவிகளுடன் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
பெருவிழா கூட்டுத் திருப்பலியினைத் தொடர்ந்து புனிதரின் இறுதி ஆசியுடன் கொடியிறக்கப்பட்டு பெருவிழா இனிதே நிறைவுபெற்றளது.
பெருவிழா சிறப்பு நிகழ்வாக அன்னதான குழுவினால் அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது