நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தும் வகையில் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
சமூகங்கள் பிளவுபடுவதை விட ஒன்றாக இருப்பதுடன், இலங்கையர்களின் பன்முகத்தன்மையே எங்களின் பலமாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றேன்.
என்றாலும், இது போன்ற ஒரு மிகத் தீவிரமான அறிக்கை, நாட்டின் பிரதமரிடமிருந்து வெளிப்படும்போது, பொது மக்கள் அதை சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை என்று கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள முடியும். இது எனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் எனது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்வுக்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் என்றும் ஆதரிப்பேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.