மட்டு.தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய தீமிதிப்பு.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி, ஏரன்ஸ் வீதி, வாழ் மக்களால் பத்தாம் நாள் சடங்கு உற்சவததினை சிறப்பிக்கும் வகையில் குருந்தையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீ குழிக்கான தீக்கட்டை மற்றும் மடப்பெட்டிகள் உள்ளிட்ட பூசைப் பொருட்கள் எடுத்துவரும் வைபவம் நேற்று முன்தினம்  இரவு மேள தாள வாத்தியங்கள் முளங்க காவடிகள் ஆடிவர கண்ணகியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

கண்ணகியம்மன் ஆலய பிரதம குரு சிதம்பரசாந்தரூபக் குருக்களால் பூசைகள் நிகழ்த்தப்பட்டது.

10ம் நாள் திருச்சடங்கினை சிறப்பிககும் முகமாக நேற்று அதிகாலை ஆலய பிரதம பூசகர் சித்திரவேல் ஐயா தலைமையில் தீமிதிப்புக்கான கிரியைகள் இடம் பெற்று, தீமிதிப்பு வைபவம் மிக சிறப்புடன் இடம் பெற்றது.

மட்டக்களப்பில் புகழ்பெற்ற தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய அலங்கார திருச்சடங்கு உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானதுடன் எதிர்வரும் நாளை அதிகாலை 5 மணியளவில் அம்பாளின் திருக்குளிர்த்தி பாடி உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews