கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையில் மீளிணக்கம் பொறுப்புக்கூறல் ,மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பாக சமூக மட்ட அமைப்புகளுடனான ஒரு நாள் செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் மத தலைவர்கள் ,,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் , உள்ளூராட்சி மன்றங்களில் பெண் உறுப்பினர்கள் , அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் , ஊடகவியலாளர்கள் ,மனித உரிமை செயல்பாட்டைகள் கலந்துகொண்டனர்
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கம் ,கொள்கைகள் என்பவற்றால் வழிநடத்தப்பட்டு ,மனித உரிமைகள் குறித்த சர்வதேச பிரகடனத்தை மீள உறுதிசெய்து ,மனித உரிமைகளை தொடர்பான சர்வதேச சாசனங்களையும் தொடர்புடைய ஏனைய சாசனங்களையும் நினைவுகொள்ளல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
குறித்த செயலமர்வு தொடர்பாக கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் புஹாரி மொகமட் கருத்து தெரிவித்தார்.