யாழ்.கோண்டாவில் பகுதியல் உள்ள மருத்துவர் ஒருவருடைய வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. கோண்டாவில் – இராசமாணிக்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் வீட்டிலிருந்தவர்கள் பிற்பகல் 2 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறியதுடன், மாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பியபோதே வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளமை தொியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.