
இந்தியா தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 104 பேரும் இன்றைய தினம் தாம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து 30ஆவது நாளாகிய இன்று இறந்த உடலை தாங்கிச் செல்கின்ற பாடையை வடிவமைத்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு போராட்டத்தை வித்தியாசமான முறையில் மேற்கொண்டிருந்தனர்










கடந்த மாதம் 19ஆம் திகதி 17 பேரால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனைக்கு அமைவாக போராட்டம் அவர்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 பேர் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் வரை அதிலும் 4 பேர் தமது போராட்டத்தை நிறுத்தியுள்ள நிலையில் தற்போது மூன்று பேர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்

இந்நிலையில் தம்மால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முப்பதாவது நாளாகிய இனறு பாடை கட்டி ஒப்பாரி வைத்து தாம் இருக்கும் இடம் வீடா சுடுகாடா என்றுநும் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உருக்கமான கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.
இந்நிலையில் எந்த விதமான பதில்களையும் தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என்று எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருக்கிறார்கள். இதேவேளை தம்மை விடுதலை செய்வதற்கு ஈழத்தில் உள்ளவர்களும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.