கிளி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார்.
இதில் கல்மடு நகரைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளவரசன் கலையரசன் என்பவர் மரணம் அடைந்திருக்கிறார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன