
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைவாக பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதிகளை மூடத்தீர்மானித்துள்ளதால் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.