
சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாயொருவர் பிரதேசவாசிகளால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்