
தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்) அவசர நிலையை அறிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதயைடுத்தே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இரத்தினபுரி, கராப்பிட்டிய
மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது