
இராணுவத்தினருக்கும் மக்களுக்குமிடையில் நேற்றிரவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இரவு 8;00 மணியளவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இராணுவம் மேல் நோக்கி துப்பாக்கி மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
விசுவமடு எரிபொறுள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வயோதிகத்தில் ஏற்பட்ட முறைகேடு காரணமாகா மக்களுக்கும் இராணுவத்தினரிற்க்கும் இடையில் நேற்றிரவு 8:00 மணியளவில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் முன்னாலுள்ள இராணுவ காவலரனிற்க்கு போத்தல்களை வீசி தாக்கியதாகவும் இதனால் இராணுவத்தினர் மேல் நோக்கி துப்பாக்கிபிரயேகம் மேற்கொண்டுள்ளனர்.இதன் பின்னர் மக்கள் அனைவரும் கலைந்துசென்றுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினரால் இருவர் கைதுசெய்யப்பட்டனர். இதனால் அங்கு பலமணி நேரம் பதற்றம் ஏற்பட்டது.