திங்கட்கிழமை முதல் மூடப்படும் பாடசாலைகள்! பொதுப்பயன்பாட்டு ஆணையகத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

நாடளாவிய ரீதியில் அடுத்தவாரம் மேல் மாகாண பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பன திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில்,கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இணைய வழியாக (ஒன்லைன் முறையில்) கற்பிக்க முடிவு செய்துள்ளதாகவும், இணைய வழி கல்வி நடைபெறும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணையகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எஸ். என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இணைய வழியில் கற்பிப்பது தொடர்பில் போக்குவரத்து வசதிகளை அடிப்படையாக கொண்டு பாடசாலை அதிபர் தீர்மானிக்க முடியுமெனவும் கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

மேலும்,கிராமப்புற பாடசாலைகளின் செயற்பாடுகளை அப்பகுதி கல்வி அதிகாரிகள் தீர்மானிக்கலாம் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்பதால்,இணைய வழி கல்வி நடைபெறும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews