குழந்தையை பிரசவித்த தாய் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியர் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற சம்பவம் நுகேகொடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் ஒருவருடைய ருவிட்டர் பதிவினை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குழந்தையை பிரசவித்த பின்னர் தாய்க்கு குருதிபெருக்கு ஏற்பட்டிருந்தது, மருத்துவர் எரிபொருளை பெறுவதற்கான வரிசையில் நின்றிருந்தார்,
முச்சக்கரவண்டி கூட கிடைக்கவில்லை, எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக வாகனங்களை அனுப்புவதற்கு பொலிஸார் முயன்றனர்.
இது இலங்கையின் கிராமமொன்றில் இடம்பெறவில்லை நுகேகொடயில் இடம்பெற்றது யார் பொறுப்பு என குறித்த மருத்துவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக தெரியவருகிறது.