
முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பார்வையிட்டார்.
இதன்போது இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிகிதனும் சென்றிருக்கிறார்.