
இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தகவலை அடுத்து நேற்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் ச. நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார்.
நேற்று முன் தினம் அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாகஅவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிட்டுள்ளனர்.
இந்த மரணத்தில் காங்கேசன்துறைப் பொலிஸார் சந்தேகம் கொண்டதால், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. உடற்கூற்றுப் பரிசோதனையில் இவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே
இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.