
இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 ஆம் திகதி முதல் வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவவித்துள்ளார்.
அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு 9 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்திற்கு 6 நிரப்பு நிலையங்களும் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், டீசல் மற்றும் பெட்ரோல் பற்றாக்குறையால் பல நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பல நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகள் காத்திருக்கின்றனர்.