யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை, மந்திககை  பகுதிகளில்  ஆர்ப்பாட்டம்…!

வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு  எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் இடம் பெற்றன.
பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப  வரிசையில் காத்திருந்தவர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி  நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எரிபொருள் இல்லை என முகாமைத்துவத்தால்  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எரிபொருள் கிடங்கை அளந்து காண்பிக்குமாறு போராட்டக் காரரால் கோரப்பட்ட நிலையில் இருப்பு காண்பிக்கபிபட்டது. இரப்பு இல்லாத நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது குறித்த போராட்டம் சுமார் 30 நிமிடங்கள்வரை வீதியை மறித்து இடம் பெற்றது.
தொடர்ந்து மந்திகை எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெற்றது.பிற்பகல் 5  மணியளவில்  சுமார் ஆயிரம் பேர் வரை தமது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சதிதம்  வருகை தந்து  வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகைதந்த பருத்தித்துறை பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர் ஆனால் போராட்டத்தை கைவிடுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுத்த நிலையில் அவர்களால்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினால்  தாம்  போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்திருந்தனர்.அதிலும் குறிப்பாக ஆயிரம் லிட்டர் பெட்ரோலுக்கு அதிகமாக இருந்தால் அதிகமாக இருக்கின்ற பெட்ரோலை தமது வாகனங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பெட்ரோல் இருப்பு அளவீடு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.அதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் நீண்ட நேரமாக சம்மதிக்காத நிலையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வீதியை மறித்தும்  எரிபொருள் நிலையத்தை முற்றுகையிட்டும்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பருத்தித்துறை போலீசாரின் சமரச பேச்சுக்களின் அடிப்படையில் எரிபொருள் அளவு காண்பிக்கப்பட்டது.அங்கு ஆயிரத்து 700 லிட்டர் பெட்ரோல் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.இந்த நிலையிலும் மேலதிக  எரிபொருளை விநியோகிக்க எரிபொருள்  நிரப்பு நிலைய முகாமைத்துவத்தினர்  மறுப்பு தெரிவித்து எரிபொருள் நிலையத்தை மூடிவிட்டு சென்றனர்
இந்நிலையில் அங்கு காத்திருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
இதேவேளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை ஒன்பது மணியிலிருந்து பத்து முப்பது மணி வரை டீசல் விநியோகம் இடம்பெற்றது.
இதில் ஒவ்வொருவருக்கும் தலா 15 ரூபா பெறுமதியான டீசல் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தமக்கு வேண்டிய அளவில் வேண்டியவர்களுக்கு டீசல் விநியோகிக்கப்பட்டது என போராட்டத்தில் தெரிவித்து  அங்கு காத்திருந்தவர்கள்  போராட்டமொன்று முன்னெடுத்திருவ்தனர்.
அந்நிலையில்  அவர்களால் அளவு டீசலில் இருப்பு அளவை காண்பிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இருப்பு காண்பிக்கப்பட்தன்  அடிப்படையில் சுமார் 300 லிட்டர் வரை அங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இனிவரும் நாட்களில்  டோக்கன் அடிப்படையிலேயே டீசல்  வழங்கவேண்டும் என்று உடன்பாட்டின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இன்றைய தினம் 15 ஆயிரம் ரூபாவிற்கு டீசல் வழங்குவது என மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  தீர்மானிக்கப்பட்டும்22 ஆயிரம்.  25  ஆயிரம் பெறுமதிக்கு  தமக்கு வேண்டியவர்களுக்கு டீசல்  வழங்கப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews