. கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலயத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது அதிபர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் நேற்று 24.06 முன்னெடுக்கப்ட்டது .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வு எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணங்களினால் மா
இந்நிலையிலேயே ஒருவேளை உணவையேனும் வழங்கவேண்டும் எனும் நோக்கில் ஆசிரியர்களினால் பொருட்கள் கொண்டவரப்ட்டு இலைகஞ்சி வழங்கப்பட்டுள்ளது. அயல் பாடசாலையான பளை இந்துகல்லூரிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை யாழ் தேசிய கல்வியில் கல்லூரி உள்ளகபயிற்சி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்பாடானது ஏனையோருக்கும் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும் எனவும் இப்படியான ஆசிரியர்களை நாம் என்றும் போற்றுவோம் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.