இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாட்டில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் அதிகளவான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருந்தோம் கே.கே. எஸ். வீதியிலுள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வினியோகம் இடம்பெறும் என்று.
ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகள் வெளியாயின. பெட்ரோல் செட்டுக்கு முன்பாகவும் இந்த விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் அரச ஊழியர்கள் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் எரிபொருள் நிலையத்துக்கு வந்தார்கள். ஆனால் திடீரென பிரதேச செயலாளர் வருகை தந்து இன்று எரிபொருள் வழங்க முடியாது.
எங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்த நிலையில் பிரதி மேயரான நானும் அவ்விடத்திற்கு வந்தேன். இந்நிலையில் அரச அதிபருடன் தொலைபேசியில் உரையாடினேன். இதன்படி உரிய பொறிமுறையை பின்பற்றவில்லை. திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை. சரியான நடவடிக்கைகள் செய்யப்படும் நிலையில் தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் குறித்த எரிபொருள் நிலையத்துக்கு வந்த அரசு ஊழியர்கள் கூறிய தகவலின் படி நேற்று கடமைக்கு செல்லாது விடுமுறையை அறிவித்துவிட்டு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர் . எரிபொருள் விநியோகம் சரியான பொறிமுறையில் பின்பற்றாத காரணத்தால் பொதுமக்களும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் அரச ஊழியர்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடி எரிபொருள் நெருக்கடி இல் நெருக்கடியில் நெகிழ்வுத் தன்மையை பின்பற்றி செயல்பட வேண்டும்.
பொருளாதாரம் சம்பந்தமாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக வீதியில் அதிக நேரத்தை செலவு செய்வதோடு கடமைகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய உரிய கடமை நேரத்துக்கு சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தற்போது அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரிப்பு பொருட்களுக்கு தட்டுப்பாடு இந்நிலையில் பணிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரச உயர் அதிகாரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. ஆகவே அரச திணைக்களங்களின அதிகாரிகளும் அரச ஊழியர்களின் நிலையை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுங்கள்! யாழ்மாநகர பிரதி முதல்வர்.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் அரசு ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டும் என யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.