கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முதலாமாண்டு மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையவுள்ளதுடன் ஏதிர்கால பற்றிய சிந்தனையுடன் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மிக்க மாணவர்களை வன்முறைத் தீவிரவாதத்தினை தடுப்பதற்கு தயார்படுத்துவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமானது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் மற்றும் ஹெல் விட்டாஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளதுடன் இத்திட்டத்தின்
உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும்,திட்டத்தின் கூறுகளை விளக்கும் கூட்டமும் கிழக்கு பல்கலைக்கழகம்-வந்தாறுமூலை,சபா மண்டபத்தில் அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ப.முரளிதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜ குணரெட்ன பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், கெல்விட்டாஸ் நிறுவன மாவட்ட திட்ட உத்தியோகத்தர் ரமேஸ் நஸார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது இத்திட்டத்தின் அவசியம் குறித்தும் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் ப.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்தத் திட்ட பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜாவினால் விளக்கமளிக்கப்பட்டு திட்டம் பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் உட்பட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பதிவாளர், பீடாதிபதிகள், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மற்றும் அம்கோர் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்
இதேவேளை அம்கோர் நிறுவனத்தின் கடந்தகால செயல்பாடுகள் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜ குணரெட்னவுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு அம்கோர் நிறுவனத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.