மியான்மரின் முன்னாள் ஜனநாயக ஆட்சியாளா் ஆங் சான் சூகி, தலைநகா் நேபிடாவில் உள்ள தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தோ்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021 பிப்ரவரியில் கலைத்தது. அப்போது சூகி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாா். எனினும், அவா் மீது ராணுவ ஆட்சியாளா்கள் சுமத்திய பல்வேறு முறைகேடு வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. எனினும், வீட்டுச் சிறையில் உதவியாளா்கள் மற்றும் செல்ல நாயுடன் வசிக்க அவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், சட்ட விதிமுறைகளின் கீழ் அவா் தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.