எட்டு மணித்தியாலங்கள்  காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொண்ட  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை  அத்தியட்சகர்……..!

பருத்தித்துறையை கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு  காலை 8:00 மணியளவில்  எரிபொருள் நிரப்புவதற்கு வருகை தந்திருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்  பதில் அத்தியட்சகர் வேலுப்பிள்ளை கமலநாதன் எட்டு மணி நேரம் காத்திருந்து சற்றுமுன்னர் எரிபொருள் பெற்று சென்றதை அவதானிக்க முடிந்தது


அத்தியாவசிய தேவைகளுக்காக தனியாரு  நாளில் குறிப்பாக சுகாதார துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்று வழங்கப்படாதிருந்தது. இதனால் இன்றைய  இன்றைய தினம் பருத்தித்துறை கிராமகோடு எரிபொருள்  நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் காலை 8 மணியளவில் வருகை தந்திருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்  பதில் அத்தியட்சகர்  நீண்ட நேரம் காத்திருந்து சற்றுமுன்னர் எரிபொருள் நிரப்பியதுடன்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்கள், மற்றும்,  தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி வரும் அதே  வேளை ஏனைய அரச உத்தியோகத்தர்களும் பெட்ரோலை பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 தங்களுக்கும் பெற்றோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்  மற்றும் முச்சக்கர வண்டிகளும் காத்திருக்கின்றனர்.
மேலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியினுடைய நேரடி நெறிப்படுத்தலில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குழப்பங்கள் ஏதும் ஏற்படாத வகையில்  எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews