வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரனும் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுகாதார சேவைகள் திணைக்களத்தினருக்கான பெற்றோல் விநியோகம் நேற்று மாலை வடமராட்சி, புலோலி பல நோக்கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.
இதன் போது பல கிலோ மீற்றர் வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வரிசையில் காத்திருந்தன. இவ் வரிசையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.A.கேதீஸ்வரனும் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதில் தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் கைத்திருந்து எரிபொருளை பெற்றுக் கொண்டிருந்த இதே வேளை அரச ஊழியர்கள் வரிசையை குழப்பி ஒழுங்கின்றி போலீசாரின் கட்டுப்பாட்டயும் மீறி செயற்பட்ட அதே வேளை நீண்ட வரிசையில் காத்திருந்த அரச உத்தியோகத்தர் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றோல் விநியோகம் முடிவடைந்த நிலையில் பெற்றோல் நிரப்ப முடியாது திரும்பி சென்றிருந்தனர்.
இதே வேளை பெற்றோல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கானவர்களும் பெற்றோல் நிறைவடைந்த பின்னர் ஏமாற்றத்ததன் திரும்பி சென்றனர்.
இரவு 7:30 மணிவரை ஒழுங்காக வந்த வரிசை பின்னர் ஒழுங்கின்றியிருந்ததே நீண்ட வரிசையில் ஒழுங்காக இருந்தவர்கள் பெற்றோல் நிரப்பாமல் ஏமாற்றத்துடன் செல்வதற்கு காரணமாக இருந்தது.
இதே வேளை பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் பருத்தித்துறை பொலீசார் ஒழுங்குபடுத்தும் கடமையில் ஈடுபட்டுருந்ததுடன் உதவி போலீஸ் அத்தியட்சகர் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது குறிப்பிட தக்கது