இந்தியாவிலிருந்து 3 இலட்சம் கொள்கைகளில் மண்ணெண்ணெயை இலங்கை எடுத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்தழிலாளர்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காமை பாதகமான விடயமாக காணப்படுகிறது.
அதனை தீர்ப்பதற்கு இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் 210 லீட்டர் கொள்ளக்கூடிய 3 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு சாதகமான முடிவை எட்டியுள்ளோம்.
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கப்பலில் எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதற்காக பாதுகாப்புச் செயலாளரிடமும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளேன்.
சபுகஸ்கந் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மண்ணெண்ணெயை தொடர்ச்சியாக பெறுவதற்கு மசாகு எண்ணெய் போதாமை காரணமாக தொடர்ச்சியாகப் பெற முடியாமல் உள்ளது.
இலங்கையில் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் போது இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெயை இறக்குமதி செய்யும் விலையிலும் பார்க்க குறைவான விலையில் வழங்க முடியும்.
ஆகவே தற்போதைய நெருக்கடி நிலைமைகளில் விவசாயிகள் மற்றும் கடத்தொள்ளாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்தியாவில் இருந்து விரைவாக மண்ணெண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.