பரந்தன் – பூநகரி வீதி அழிவடைந்துள்ளமைக்கு காரணம் இதுதான்! அனுரகுமார திஸாநாயக்க.

பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது?

சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம்இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கற்றுக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி.விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம்,

கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது. இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி,

தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே என்றார். அனுர குமார திசநாயக்க.

Recommended For You

About the Author: Editor Elukainews