இன்று இரண்டு மணி முதல் நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் முப்படையினரின் சலவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
நாளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலைமையில் அதற்காக நீண்ட தூரத்தில் மக்கள் காத்திருந்தனர்.
நிலையில் அவர்களுக்கு இராணுவத்தினர் பிற்பகல் நான்கு மணியிலிருந்து டோக்கன் வழங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வுடயம் தொடர்பில் அறிந்திராத நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டோக்கன் வழங்கும் இராணுவத்தினரை என்ன செய்கிறீர்கள் என வினவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இவ்வாறு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து லிடைக்கின்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.