பாடசாலைகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை..! கிராமப்புற பாடசாலைகள் குறித்த அரசின் கருத்தால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்.. |

நாடு முழுவதும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு 10ம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற பாடசாலைகள் தொடர்பில் அந்தந்த பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் தீர்மானிக்கலாம். என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

இதன்படி இரு வாரங்கள் நர்ப்புற பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் கிராமப்புற பாடசாலைகள் தொடர்பாக அரசு பொறுப்பை அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரிடம் வழங்கியிருக்கும் நிலையில்,

இந்த அறிவிப்பினால் வெளிமாவட்டங்களில் அல்லது துார இடங்களில் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews