
யாழ்.இளவாலை – பிரான்பற்று பகுதியில் 6 வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையுடன் நண்பர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரது தந்தையின் நண்பரான அயல் வீட்டை சேர்ந்த 45 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.