
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்றையதினம் ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.


இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக
வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது.
அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார்.