
எரிபொருள் தரக்கோரி பொதுமக்கள் சிலர் மாவட்ட செயலகதில் கூடி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. போராட்டதில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்தில் சத்தியாக்கிரக போராட்டமாக முன்னெடுத்தனர். இதன்போது, மாவட்ட செயலக அதிகாரிகள் அவர்களுடன் கலந்துரையாடினர்.
5 நாட்களாக எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் எமக்கு 1 லீட்டர் பெற்றோலாவது தாருங்கள் என அவர்கள் இதன்போது வலியுறுத்தினர். சிலர் மாவட்ட செயலகத்தில் அனுமதி பெற்றதாக கூறி எரிபொருள் பெற்று செய்கின்றனர். அது போன்று தாம் வீடு செல்வதற்கு எரிபொருள் தருமாறு கூறியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வைத்திய சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே இருப்பில் உள்ள எரிபொருளிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைத்து சென்றதுடன், தொடர்ந்தும் எரிபொருள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.