
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் வட பிராந்திய முகாமையாளர் நேரடியாக பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு உரிய எரிபொருள் மிக விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதுடன் பஸ் போக்குவரத்தும் இடம்பெற்று வருகிறது.



நேற்று ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை பல நூற்றுக்கணக்கான பயணிகள் பல இன்னல்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து மக்களிடையே போக்குவரத்து வழமைக்கு திரும்பியது