
மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்ததில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலிசார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
தற்போது வரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிபிடத்தக்கது.