
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிழக்கு பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் (28/06/2022) கள் உற்பத்தி தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
நீண்ட நேரமாக தொழிலுக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி தேடி சென்ற வேளை பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடு பின் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனையின் பின் சடலம் குடும்பஸ்தாரிடம் ஒப்படைக்கப்
இந்தச் சம்பவத்தில் இறந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஞானபிரகாசம் அமலதாஸ் (வயது-56) என்பவரே உயிரிழந்தவராவார்.