உயிர்காப்பு நீச்சர் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி நீர்விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற பயிற்சிகளின் பின்னர் அவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் நீச்சல் தடாக அரங்கில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களையு்ம, வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தேசிய உயிர் காப்பு சம்மேளனம் தலைவர் அசங்க நாணயக்கார, விளையாட்டுத்துறை அமைச்சின் மாகாண இணைப்பாளர் கொஸ்ரா, மாவட்ட சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய உயிர் காப்பு சம்மேளனம் சார்பில் அரசாங்க அதிபருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை, உயிர்காப்பு பயிற்சிகளில் ஒன்றான கராத்தே பயிற்சி பெற்றுவரும் மாணவர்களிற்கு பாது காப்பு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.