யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 66 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 95 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 603 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்.மாவட்டத்தில் 38 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 11 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேர்,தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 06 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
வவுனியா மாவட்டத்தில் 03 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 05 பேர்
பளை பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 பேர்
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 07 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன்மயிலிட்டி தனிமைப்படுது்தல் நிலையத்தில் 02 பேர்,முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் மேலும் 28 பேர் உட்பட 30 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (ஓகஸ்ட்-06) 269 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது இவ்வாறு 30 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 16 பேர், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 07 பேர்,
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 03 பேர், யாழ். பல்கலைக் கழகத்தில் – 02 பேர்,
இவர்களுடன் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.