மட்டு.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 208 ஆவது கல்லூரிதினம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதப்பெரியார்களான மட்டு.புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு வண.ஏ.சாம் சுபேந்திரன்,நாவட்குடா மெதடிஸ்த திருச்சபைக்குரு வண.எஸ்.முருகுப்பிள்ளை, கல்லூரியின் முன்னாள் அதிபர் கே.ஜீ.அருளானந்தம்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எந்திரி வை.கோபிநாத், பிரதியதிபர் எஸ்.நந்தகோபால்,
பழைய மாணவர் சங்கத்தலைவர் எஸ்.பகீரதன்,குருளைச்சாரண தலைவர் ந.பிரதீபன்,ஆசிரியர்கள்,குருளைச்சாரண ஆசிரியர்கள்,மாணவர்கள்,சாரண மாணவர்கள், கலந்துகொண்டார்கள்.

208 ஆவது ஆண்டு நிறைவில் நன்றியோடு காலடி பதிக்கும் வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் நன்றி செலுத்தும் வழிபாட்டு ஆராதணை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்
காந்தி பூங்காவில் உள்ள கல்லூரியின் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாரின் சிலைக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது.

மட்டக்களப்பின் முதன்மை கல்லூரியாக திகழும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி நூற்றுக்கணக்கான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், உட்பட பல புத்திஜீவிகளையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews