க.பொ.த உயர்தரப்பரீட்சை 2021 பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை பாட இலக்கம் (65) க்கான செய்முறைப் பரீட்சை நேற்று முன்தினம் 29 ஆம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி வரை இடம்பெற உள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.
இலங்கை முழுவதும் 44 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சையை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்த மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பாடத்துக்கான எழுத்து பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் செய்முறை பரீட்சையில் தோற்றுவது கட்டாயமாகும். பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு பாடசாலையின் அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு பதிவு தபாலிலும் அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீசார்த்திகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.donetes.lk என்ற இணையதளத்தின் ஊடாக தமது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட் செலுத்துவதன் மூலம் அனுமதிகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
பரீட்சார்த்திகள் தமக்கு வழங்கப்பட்ட திகதியில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக பரீட்சை நிலையத்திற்குள் உட்பிரவேசிக்க வேண்டும் என தெரிவித்ததோடு அனுமதி அட்டையின் பிற்பகுதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை
உரிய வகையில் பின்பற்றி தவறாது செய்முறை பரீட்சையில் தோற்றுமாறு அவர் மேலும் தெரிவித்தா